திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று, திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் கிராமம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றபோது இனியவன் (வயது 12) , சந்துரு (வயது 12) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பகுதியில் உள்ள எம்.பள்ளத்தூர் ஏரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த செல்வி (வயது 11) புவனா (வயது 11) மற்றும் வினோத் (வயது 7) பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ” திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிவித்துள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…