புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘இந்தியக் குடியரசுத் தலைவராகத் பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன். ‘ என தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வாழ்த்துச் செய்தி!#DMK #CMMKStalin #DraupadiMurmu pic.twitter.com/TrdRqoTt2P
— DMK (@arivalayam) July 25, 2022