முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.!
தமிழகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பாடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று 5.10.2020 தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டிடங்களுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழக கல்தூரிகள் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றை 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்படவுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். pic.twitter.com/3JEWrsfXNV
— DIPR TN (@TNGOVDIPR) October 5, 2020