281 கோடி மதிப்பிலான 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர்!
நீர்வள ஆதார துறை சார்பில் 280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீர்வள ஆதார துறை சார்பில் 287 கோடி ரூபாய் மதிப்பிலான 22 நிறுவனத்தின் திட்டப் பணிகளுக்காக காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கும், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அட்டை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கத்தை உருவாக்கி 62 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 42 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் இடங்களில் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 143 கோடி மதிப்பிலான 19 திட்ட பணிகளுக்கு 15 மாவட்டங்களில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.