சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவைகளை துவக்கி வைத்தார் முதல்வர்!

Default Image

முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் எல்இடி வீடியோ வாகன சேவையை துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய எல்இடி திரையுடன் கூடிய வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். ஒரு மண்டலத்திற்கு தலா இரண்டு வாகனம் என்ற முறையில் 15 மண்டலங்களுக்கும் 30 எல்இடி வீடியோ வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அதுபோல கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒரு லட்சம் பேருக்கு செல்போன் மூலம் முதல்வர் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 லட்சம் வீடுகளுக்கு கொரோனா மற்றும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்