உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தூடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று நிகழ்வில், உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதலில் 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர். அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இதுபோன்று, தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு பெயரில் உப்பு விற்பனையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். உலமாக்கள், பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு ரூ.5.43 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,649 பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மானியத்தொகையும் முதல்வர் வழங்கினார்.