முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஓமைக்ரான் மற்றும் கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.
கொரோனா பரவலை முன்பு அதிமுக அரசு எப்படி கட்டுப்படுத்தியதோ, அதுபோன்ற சூழலை இந்த திமுக அரசு உருவாக்க வேண்டும். முதலமைச்சர் முக ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டியிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் போறாது என்றும் அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் வேண்டுகோள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்தவிட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார். மேலும், பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…