மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு..!
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் போது, வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.