காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக முடிச்சூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் முதல்வர் நேரில் சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…