கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்த முதலமைச்சர்
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனுகம்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனுகம்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஆய்வு செய்தார்.