செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் நேரில் ஆய்வு ..!
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவு அதிக மழை பெய்துள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் நகராட்சி, இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்பு அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்துள்ளார். அது போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.