கள ஆய்வில் முதலமைச்சர்; 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு.!

Default Image

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகளில் ஆய்வு.

கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடங்கினார். அரசு தொடங்கும் செயல்திட்டங்கள் குறித்து மாவட்டங்களில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய இந்த திட்டம் செயல்படுகிறது.

நேற்று சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு நவீன பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த முதல்வர் அதன் பிறகு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கிறதா? சிறப்பு முகாம்கள் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்பது குறித்தும் முதல்வர் ஆலோசித்தார்.

நேற்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடந்திய முதல்வர் இன்று ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்