நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்.!
தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில், இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் , காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் பழனிசாமிதிறந்துவைத்தார் .
நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்து , புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.