தமிழகம் தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை அடையாறில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல், தமிழகம் தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன். நான் எப்பொழுது தமிழ்நாடு என்பது இந்தியா என்று சொன்னேனோ, அப்பவே இந்தியா என்பதும் தமிழ்நாடு தான்.
இந்தியா முன்பு தமிழகம் கீழ்மட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வந்தால், அது இந்தியாவே இல்லை, அப்படிப்பட்ட இந்தியாவே வேண்டாம். ஒரு மொழி இன்னொரு மொழிக்கு மேல், ஒரு பாரம்பரியம் இன்னொரு பராமரியத்திற்கு மேல் என்று சொல்கிற இந்தியாவே வேண்டாம். அனைத்து மொழிகளின் பெருமையும் சேர்ந்தது தான் இந்தியா என கூறியுள்ளார்.
தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதிரிகள். எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதே பாஜகவின் சிந்தாந்தம். பாசத்தால் அரவணைப்பதே காங்கிரேசின் சிந்தாந்தம். உத்தரப்பிரசத்தில் ஒரு தலைவர் அமித்ஷாவின் காலில் விழ என்ன காரணம்? அங்கு நடந்தது தான் தமிழக முதல்வருக்கும் நடைபெற்று உள்ளது. மத்திய பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.
எந்த தமிழர்களும் இதை விரும்பமாட்டார்கள். இதில் முதல்வருக்கும் விரும்பம் இல்லை. ஆனால், அவர்கள் காலில் விழவேண்டிய கட்டாயம். முதல்வர் நேர்மையை இழந்த ஒரே காரணத்தால்தான் பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார். அதனால் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவையும் கொடுத்து பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்த வேண்டும் என போராடி வருகிறேன்.
தமிழகத்திற்கு ஒரு அரசியல் மாற்றம் வேண்டும். பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஒரு அருமையான மாநிலம், மிகவும் திறமையான இளைஞர்களை கொண்ட தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…