வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 20 லட்சம் காசோலை வழங்கியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வைத்து கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார்.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரருக்கு ஏகாம்பரம் அவருடைய மனைவி குமாரி அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி அவருடைய மனைவி தமயந்தி அவர்களுக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த பழனிக்குமார் அவருடைய மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கும் முதல்வர் இன்று 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார்.