இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்க முதல்வர் சேலம் செல்கிறார்!
- நேற்று முதல்வர் கல்லணையை தூர்வாரும் பணியை பார்வையிட திருச்சி சென்றிருந்தார்.
- இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் செல்கிறார்.
நேற்று முதல்வர் திருச்சியில் உள்ள கல்லணையில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்றிருந்தார். கல்லணையை பார்வையிட்ட பின்பதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார்.அதன் பின்பாக நேற்று திருச்சியில் ஓய்வெடுத்த முதல்வர், இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் ஏற்கனவே வழக்கம் போல ஜூன் 12 ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்க்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது போல இந்தாண்டும் தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, இன்று 10:45 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.