ஹஜ் பயணிகளுக்கு மானிய தொகை வழங்கினார் முதலமைச்சர்!
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 3,987 பேருக்கு மானியத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஹஜ் பயணிகள் 5 பேருக்கு தலா ரூ.25,070 தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகள் 3,987 பேருக்கு தலா ரூ.25,070 மானிய தொகைக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளது.
முதல் முறையாக ஹஜ் யாத்திரை செல்வோருக்கு தமிழக அரசு மானிய தொகை வழங்குகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சருடன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக அரசின் தலைமை செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் உடனிருந்தனர்.