சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு முதல்வர் நிதியுதவி..!
சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார்.
முருக வேலை கைது செய்ய 10 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.