மாநில மக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்!
மாநில மக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்றும், கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது என்றும் தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று மாலை 6 மணியளவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில மக்களுடன் தொலைக்காட்சி வாயிலாக உரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.