ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.
இதன்பின் தற்போது முதலமைச்சர் பழனிசாமி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.