அடுத்த முதல்வர்??அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார் இ.பி.எஸ் !

Published by
kavitha
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு  சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது.
இவ்விவகாரத்திற்கு  இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது.அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.,7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி,  இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்க  அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் சுமார் 18 மணி நேரம்  மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்,  ஒபிஎஸ் – இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர்.
இந்த ஆலோசனை அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்த நிலையில்
இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் குறித்தும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் வருகை தர தொடங்கி உள்ளனர்.இந்நிலையில்  சென்னையிலுள்ள தனது இல்லத்தில் இருந்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் புறப்பட்ட  நிலையில் சென்னையிலுள்ள  இல்லத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அலுவலகம்  நோக்கி புறப்பட்டார்.
Published by
kavitha

Recent Posts

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

16 mins ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

21 mins ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

30 mins ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

49 mins ago

ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை…

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

1 hour ago

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…

1 hour ago