கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என்றும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நோய் பரவல் குறைவாக இருப்பதற்கு காய்சல் முகாம்கள் நடத்தப்படுவது பேருதவியாக உள்ளன. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர், 1,554 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தினமும் 300 முதல் 350 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவுபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்றியப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…