முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் ..! சிபிஐ  விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ  விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி  வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது.
இதனால் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,833 கோடி மதிப்புக்கு ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.திமுக கூறிய 5 டெண்டர்களில் 3 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதில் நெல்லை-செங்கோட்டை -கொல்லம் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
Image result for high court
இந்நிலையில் இன்று திமுக சார்பில் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ  விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் 1 வாரத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும்.ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்