#BREAKING : இன்று இரவு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் மட்டும் கொரோனவால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மதுரையில் உயிரிழந்தார்.இதற்குஇடையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சிவாயிலாக உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி .கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.