பிரதமருக்கு கோரிக்கை விடுத்த டீவீட்டை நீக்கிய முதலமைச்சர்!காரணம் என்ன ?பிரதமருக்கு கோரிக்கை விடுத்த டீவீட்டை நீக்கினார் முதலமைச்சர் விளக்கம்
இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் பழனிசாமி நீக்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முதலமைச்சர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.அதில்,பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தமிழை பிற மாநில கல்வித்திட்டத்தில் விருப்ப மொழியாக்குவது பழமையான மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.ஆனால் இதற்கு பின் பிற மாநிலங்களில் தமிழை 3 -வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் பழனிசாமியின் ட்வீட் நீக்கம் செய்யப்பட்டது.
இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான். எந்த நிலையிலும், எந்த வடிவிலும் இந்தியை தமிழ்நாடு ஏற்காது, இதுவே அரசின் கொள்கை ஆகும்.
மேலும் இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் பழனிசாமி நீக்கினார்.தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் ட்வீட் செய்தார்.அவரது கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.