முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கடும் முயற்சியால் மெகா கூட்டணி -பியூஷ் கோயல்
- அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
- முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கடும் முயற்சியால் மெகா கூட்டணி அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஜி.கே.மணி, சுதீஷ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் பங்கேற்றனர்.
இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கடும் முயற்சியால் மெகா கூட்டணி அமைந்துள்ளது. விஜயகாந்த் உடல்நலம் பெற கூட்டணி தலைவர்கள் வாழ்த்துகிறோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.