இன்று ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.!
இன்று ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழகத்தில் நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,020 லிருந்து 1,101 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முதலமைச்சர் பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதையெடுத்து இன்று கொரோனா தடுப்பு குறித்து, ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.