இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை!
- தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- முதல்வர் இன்று 38 மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, மேலும், ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாநில வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் இருந்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பொது போக்குவரத்து தொடங்கபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாமா என்பது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.