ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து…!
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம் எனவும், 41 வருட காத்திருப்புக்கு முடிவு வந்துள்ளதாகவும், ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும், இந்த வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது என உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
That was a stellar performance to bag #Bronze.
The 41 year wait comes to an end. Congratulations to #TeamIndia for winning the 12th #Olympics medal in Men’s Hockey. I’m sure, with this win in #Tokyo2020, a new chapter has begun in the history of Indian #Hockey. pic.twitter.com/eLd3n7f6pA
— M.K.Stalin (@mkstalin) August 5, 2021