2021ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படமாகவும் `கடைசி விவசாயி‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2021ம் ஆண்டு, சிறப்பு பிரிவில் ’கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயிக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘69-வது தேசிய திரைப்பட விருதில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஷ்ரேயா கோஷல், ‘கருவறை’ ஆவணப்படத்துக்காக சிறப்பு விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான NargrisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது.’ என பதிவிட்டுள்ளார்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…