தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இதனையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில் ,தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பல்வேறு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது.இந்த இனிய நாளில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் எல்லா வளமும்,நலமும் பெற்று சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…