கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் இரங்கல்.!
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆகிய ஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவது கவலை அளித்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றால் சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 33 வயதே நிரம்பியுள்ள காவலர் நாகராஜன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .கொரோனா பாதிக்கப்பட்டு காவலர் ஒருவரின் பலி கடும் அதிர்வலைகளை அத்துறை சார்ந்தவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தசெய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில்முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/zNgD4FFaZC
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 6, 2020