கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவா் ச.இராமநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,ஈடுசெய்ய முடியாத ச.இராமநாதன் அவர்களது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், இந்நாள் தலைவருமான, கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன்.
பல்வேறு கல்வி நிலையங்களை நிறுவிய அவர், 1983-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், 2000-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை செயலாளராகவும் பணியாற்றியவர்.
பின்னர், 2021-ஆம் ஆண்டு முதல் மீண்டும் தலைவராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் முதலிய விருதுகளைப் பெற்றவர்.
ஈடுசெய்ய முடியாத அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். “,என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…