மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம்…!

Default Image

மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை அடைந்ததாக கலக்கத்துடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறங்கி விட்டதாக கூறப்படும் நிகழ்வு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்கான கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, நடத்துநர்கள் திறம்பட செயல்படுத்தி வரும் இக்காலத்தில் ஒரு நடத்துனரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. அனைவரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்