இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழ்நாட்டு மீனவருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!
இந்திய கடற்படையால் சுடப்பட்டு காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, வீரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிக்சிஹேயளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழ்நாட்டு மீனவர் வீரவேல்-க்கு உரிய சிகிச்சை அளிக்க உததரவிட்டுள்ளதோடு, காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.