தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு – முதலமைச்சர் அறிவிப்பு

trb rajaa

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றும் இன்று பிரமாண்டமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர் என பலரும் பங்கேற்றனர். ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதன்படி, இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது.

ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

உலகமே வியக்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மகத்துவம் என்னென்றும் பேசப்படும் என்றார்.

மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும் இந்த சிறப்பு குழு ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் செயல்படும் எனவும் அறிவித்தார். மேலும், முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்