பிக்பாஸை முதல்வரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி..!
நேற்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.
கமல் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் அல்ல:
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கமல்ஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி, நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா..? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல்கள் அருமையான பாடல்கள் அது மக்களுக்கு நன்மை பயக்கும் பாடல்கள் என்று கூறினார்.
முதல்வருக்கு கமல் பதில்:
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நேற்று பதிவிட்டுள்ளார்.
கமலுக்கு அமைச்சர் பதில்:
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது, அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை. பிக்பாஸை முதல்வரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை. மேலும், பிக்பாஸ் பார்க்க நேரமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.