அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காளையின் உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் பத்து 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறுகையில், உலகமே வியக்கத்தக்க அளவிற்கு இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வழி வகுத்துக் கொடுத்தது அதிமுக அரசுதான் என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…