#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..!
முதல்வர், துணை முதல்வர் இன்று இரவு 08.30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.
புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பிரச்சாரத்திற்காக வந்த அமித்ஷா இரவு சென்னை திரும்பயுள்ளார். இந்நிலையில், சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 08.30 மணி அளவில் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அமித்ஷா முன்னிலையில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஏற்கனவே சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதிமுக சார்பில் பாமக வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவிற்கு அதிமுக சார்பில் எவ்வளவு தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக சார்பில் பாஜகவிற்கு 18 தொகுதிக்குள் தான் ஒதுக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.