கொல்கத்தா புறப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி..!
மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்காமல்புறப்பட்டார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.
பின்னர், சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி பிரிவு உபச்சார விழா எதிலும் பங்கேற்காமல் தன்னுடைய காரிலேயே சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டார்.
இன்று வழக்குகளை விசாரிக்கவில்லை. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு சஞ்ஜீப் பானர்ஜி மாற்றப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.