தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு …!
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர்,இதுகுறித்து தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”சமீபகாலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது”,என்று பாராட்டினார்.
மேலும்,”கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது.வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள்,அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்”,என்று கூறினார்.