“30 நாட்கள் தருகிறோம்;மீறினால் 10 லட்சம் பேர்” – மீண்டும் அண்ணாமலை விடுத்த கெடு!
நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.
இதனிடையே,”திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றும்,எனவே,திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.இதனை 72 மணி நேரத்திற்குள் இந்த அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்,போராட்டம் நடத்துவோம்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று பேரணி நடத்தப்பட்டது.அதன்படி,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
அப்போது பேரணியில் பேசிய அண்ணாமலை:”திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விட்டு,தற்போது அக்கறை இல்லாமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார்.கச்சத்தீவை எப்படி மீட்பது என பிரதமர் மோடிக்கு தெரியும் கச்சத்தீவை கனவிலும் கூட திமுகவால் மீட்க முடியாது.
மேலும்,சென்னையில் நாம் நடத்திய போராட்டம் தமிழக முதல்வருக்கு அறிவுருத்துவதற்காக நடத்தப்பட்டது.ஆனால்,இனியும் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெறும்.இன்னும் 750 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.விடியா அரசை இத்தோடு விடப்போவதில்லை.”,என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் நேரம் தருவதாகவும்,குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியை நடத்துவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் நேரம் தருகிறோம்.
குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியை நடத்துவோம்..
– மாநில தலைவர்
திரு.@annamalai_k #KAnnamalai pic.twitter.com/HA1J2fCJVO— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 31, 2022