முதல்வர், துணைமுதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்

Default Image

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்  பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் முடிந்த பிறகு வருகின்ற 14-ஆம் தேதி சட்டசபை மீண்டும் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டசபை கூட்டம் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சட்டசபை கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர்  பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்