தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கும் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…