சிதம்பரம் கோயில் சர்ச்சை:நாளை மாலை 3 மணிக்குள் – இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள்,ஆலோசனைகளை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி, அறநிலையத்துறை அமைத்துள்ள குழுவிடம் இன்றும்,நாளையும் (ஜூன் 20,21 ஆகிய தேதிகளில்) காலை 10 மணி முதல் 3 மணி வரை சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கருத்துக்களை கூறலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி,நேரிலோ அல்லது vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ நாளை ஜூன் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.இதனிடையே,சிவபக்தர்கள் கோயிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு வருகை புரிவர் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறபபடுகிறது.

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

38 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

1 hour ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

4 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

6 hours ago