தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய சிதம்பரம் நடராஜர் கோயில்.!
புரேவி புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்பகுதி தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.இந்த புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும் பரவலாக பெய்து வரும் கனமழையால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலின் உள்பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கியுள்ளது . நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது .தண்ணீர் தேங்க காரணம் வடிகால் வசதிகளை சரியான முறையில் தூர்வாராததால் தான் என்று கூறப்படுகிறது.