சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பவர்களை கண்காணிக்க இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் 2 வருடங்களாக மட்டும் அந்த கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னரும் இந்த தடை அங்குள்ள தீட்சிதர்களால் தொடர்ந்ததால், இந்த பிரச்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. அங்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பு வெளியானது.
பின்னர் தமிழக அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன் பிறகு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் மீண்டும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அங்குள்ளவர்களால் மறுப்பு தெரிவிக்கப்படுவதாகபுகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து, இந்து அறநிலையத்துறை புதிய கண்காணிப்பு குழுவை நியமித்தது. 5 பேர் அடங்கிய குழு ஆளுக்கு ஒரு நாள் கண்காணிக்க வேண்டும். யாரேனும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் பக்தர்களை தடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என அந்த குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…