எவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை

Default Image

ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று  இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு  நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணையை, எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும்.எனவே  அவர் மீண்டு வருவார் என்று  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்