சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து 144 தடை உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்தார்.
இந்நிலையில், சிதம்பரத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வதற்காக காவல்துறை தரப்பில் கூறியதையடுத்து 144 தடை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…