தங்கத்தை விழுங்கிய கோழி காலி! வருத்ததுடன் அடக்கம் செய்த உரிமையாளர்!!

Default Image

குளிக்கும் பொது கழற்றி வைத்த தங்க கம்மலை கோழி கொத்தி விழுங்கியதால், கோழி பரிதமாக உயிரிழந்தது.

சென்னை புளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார். திருமணமாகி குழந்தை இல்லாததால், கோழி ஒன்றை தனது குழந்தை போல வளர்த்து வந்தார். அதற்க்கு பூஞ்சி என்றும் பெயரை சூட்டினார்.

அவரின் அக்கா மகள் தீபா, குளித்து தலையை துவட்டும் பொது தனது சிறிய ரக கம்மலை கழற்றி வைத்து வந்தாள். அதை, அந்த கோழி கொத்தி விழுங்கியது. இதை கண்டதும் அதிர்ந்து போன தீபா, வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மிரண்டு போன அவர்கள், கோழியை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீபா, தனக்கு கம்மல் முக்கியம் இல்லை என்றும், கோழியின் உயிர்தான் முக்கியம் என்று மருத்துவரிடம் கூறினார்.

அந்த கோழிக்கு X-ray எடுத்து பார்த்த மருத்துவர்கள், கோழியின் இரைப்பையில் கம்மல் இருப்பதும், அதனை அறுவை சிகிச்சை மூலமே எடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.

அதன்படி, சிவகுமார் அந்த கோழியை வியாழக்கிழமை கொண்டு சென்றார். அதற்க்கு செயற்கை சுவாசம் கொடுத்து அறுவை சிகிச்சையை தொடங்கினர். அரைமணி நேரம் கவனமாக அறுவைசிகிச்சை அளித்த மருத்துவர்கள், அந்த கம்மலை மீட்டனர். அனால், சிகிச்சையின் பொது அந்த கோழி இறந்து விட்டதாக மருத்துவர் கூறினார்.

இதனை கேட்ட சிவகுமாரும் அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். கோழியை தனது வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்